மனைவிக்கு முன் நாயை ப்ரஷர் குக்கரில் வேக வைத்து ஒத்திகை

தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம் ஜிலேலகுடா, நியூ வெங்கட்ராமா காலனியை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 39). முன்னாள் இராணுவ வீரர். இவரது மனைவி வெங்கட மாதவி (35). இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற குரு மூர்த்தி காஞ்சனப்பேட்டையில் காவலாளியாக வேலை செய்து வந்தார். மனைவியின் நடத்தையில் குருமூர்த்திக்கு சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த குருமூர்த்தி மனைவியை கொலை செய்தார். பின்னர் மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டினார். எலும்புகளை தனியாகவும், சதைகளை தனியாகவும் பிரித்தெடுத்தார். அவற்றை ப்ரஷர் குக்கரில் வேக வைத்தார். வேகவைத்த சதைகள், எலும்பு துண்டுகளை ஜில்லேலவில் உள்ள குளத்தில் வீசினார்.

இது தொடர்பாக பொலிஸார் வழக்கு பதிவு செய்து குருமூர்த்தியை கைது செய்தனர். இது தொடர்பாக குருமூர்த்தியிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த குருமூர்த்தி, உடலை துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளார்.

இந்த உடலை எப்படி அழிப்பது என நீண்ட நேர யோசனைக்கு பின் தொலைபேசியில் யூடியூப் மற்றும் ஆங்கில படங்களை பார்த்து எலும்புகளை கரைப்பது எப்படி என வீடியோக்களை பார்த்துள்ளார்.

இதனை தொடர்ந்து நாய் ஒன்றை கொன்று சோதனை செய்ய முடிவு செய்தார். அவரது வீட்டின் அருகே சுற்றி திரிந்து கொண்டிருந்த நாய் ஒன்றை உணவளிப்பது போல வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். உள்ளே வந்த நாயை அடித்துக்கொன்று துண்டு துண்டாக வெட்டியுள்ளார். பின்னர் நாய் கறி எலும்புகளை குக்கரில் வேகவைத்து, வெயிலில் காயவைத்து பொடிப்பொடியாக்கி கால்வாய் தண்ணீரில் கரைத்துள்ளார்.

அதே பாணியில் மனைவியை வெட்டி சமைத்து தண்ணீரில் வீசியதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *