மஹிந்தவுக்கு 10 வீடுகளை வழங்க நாட்டு மக்கள் தயாராகவுள்ளனர்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை இல்லாமலாக்கினால் அவரின் பாதுகாப்புக்காக தெற்கில் இருந்து மக்கள் வருவார்கள். அதேபோன்று அவரின் வீட்டை அரசாங்கம் பெற்றுக்கொண்டால் அவருக்கு 10 வீடுகளை வழங்க இந்த நாட்டு மக்கள் தயாராக இருக்கிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு வழங்கப்பட்டிருக்கும் வீட்டை முடியுமானால் 44 இலட்சம் ரூபாவுக்கு குத்தகைக்கு வழங்கிக் காட்டுங்கள்.

காெண்டை கட்டிய சீனர்களுக்குதான் 44 இலட்சத்துக்கு அந்த வீட்டை வழங்க முடியும். மஹிந்த ராஜபக்ஷ்வின் வீட்டை முடியுமானால் மீள பெற்றுக்காெள்ளுங்கள்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒன்றுக்கு 10 வீடு வழங்குவதற்கு இந்த நாட்டில் மக்கள் இருக்கிறார்கள். அவரின் பாதுகாப்பு தரப்பினரை அகற்றினால் அவருக்கு பாதுகாக்கு வழங்க தெற்கில் இருந்து மக்கள் வருவார்கள்.

சந்திரிகா குமாரதுங்க குடும்பம்தான் இந்த நாட்டுக்கு அவர்களின் குடும்ப காணிகளை பகிர்ந்து வழங்கியவர்கள்.

அதனால் சந்திரிகா குமாதுங்க தனது உத்தியோகபூர்வ வீட்டில் இருந்து வெளியேறியதனால் அவர்களின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படப்போவதில்லை.

மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் அனைவரும் இந்த நாட்டுக்கு சேவை செய்தவர்கள். அதனால் ஜனாதிபதி தும்முல்லை விமலே போன்று கதைக்கக்கூடாது.

எங்களுக்கு பாதுகாப்பு தரப்பினர் தேவையில்லை. ஆனால் இன்னும் 6 மாதங்களில் அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கு பாதுகாப்பு தேவைப்படும். என்றார்.

மேலும் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் ஜனவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால் இந்த காலப்பகுதியில் நாட்டில் 10 துப்பாக்கி சூட்டு சம்பவங்களும் 7 மரணங்களும் இடம்பெற்றுள்ளன. வரலாற்றில் அதிக துப்பக்கி சூடு இடம்பெற்றிருப்பது இந்த காலப்பகுதியிலாகும்.

இவையும் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் மூலம் மாற்றம் ஏற்பட வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு சுதந்திரமாக நடமாட முடியுமான சூழல் ஏற்படும் என தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button