கலாபூஷணம் பி.எம்.அந்தனி ஜீவா காலமானார்

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஆயுள் உறுப்பினரான கலாபூஷணம் பி.எம். அந்தனி ஜீவா அவர்கள் 202.01.10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலமான செய்தி அறிந்து ஆழ்ந்த துயர் கொள்கின்றோம்.
சிறந்த எழுத்தாளரும், நாடக ஆசிரியரும், இலக்கிய கட்டுரையாளரும் ஆகிய அன்னார் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினராகவும் செயலாற்றியவர் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 2025.01.11ம் 2.00 மணி முதல் Peiris Funeral Services (241, Hospital Road, Dehiwala – Mount Lavinia) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 2025.01.12ம் திகதி 3.00 மணிக்கு நல்லடக்கத்திற்காக கிருளப்பனை பூர்வாராம வீதியில் உள்ள பொதுமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
அன்னாருக்கு ஆழ்ந்த அநுதாபங்கள்; அக்கினிக்குஞ்சு இணையத்தள குழுமம்
![]()