இலக்கியச்சோலை
அகவை 75 ல் அடிபதிக்கும் செங்கதிரோனை அக்கினிக் குஞ்சு வாழ்த்தி வழங்கும் வாழ்த்துப்பா!

அகவை எழுபத்தைந்தில் அடிபதிக்கும்
அன்புச் செங்கதிரோனை அக்கினிக்
குஞ்சு பாஸ்கர் வாழ்த்தி வழங்கும் வாழ்த்துப்பா….
அகவை எழுபத்தைந்தில் அடி பதிக்கும்
அன்பான செங்கதிரோன் ஆண்டுபல வாழ்க
நீண்டபுகழ் பெறுக நிம்மதியும் நிறைக
நிலவுலகு போற்ற நீண்டநாள் வாழ்க
செந்தமிழின் சிறப்பு செங்கதிரோன் அன்பர்
சந்தமுடன் சிந்து தந்திடுவார் தினமும்
சொந்தமுடன் தமிழை இணைத்திடுவார் நாளும்
வந்தனைகள் செய்து வாழ்த்துகிறேன் நானும்
சிறகடிப்பார் தினமும் செங்கதிரோன் வானில்
தமிழ்பாடும் குயிலாய் வலம்வருவார் நாளும்
அமிழ்தான தமிழை அருந்தியவர் நிற்பார்
அகிலமதில் என்றும் ஆனந்தம் பெறுக
பலநலனும் பெறுக பார்புகழ வாழ்க
மங்கலம் நிறைய மனமகிழ வாழ்க
சொந்தமெலாம் வாழ்த்த சுகமாக வாழ்க
எந்தமிழின் மைந்தா இன்புமுடன் வாழ்க
![]()