லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; குழந்தைகள் உட்பட 40 பேர் பலி

லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர்.

பாலஸ்தீனத்தின் காசாவில் இருந்து இயங்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 7ல் இஸ்ரேல் மீது கொடூர தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி தரவும், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனான் நாட்டில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பை முடக்கவும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

தற்போது லெபனான் மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் பல குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர். தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் நடந்த தாக்குதலில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீட்கப்பட்ட உடல் பாகங்கள் அடையாளம் காண, டி.என்.ஏ., சோதனைக்கு உட்படுத்தப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

லெபனானில் கடந்த ஆண்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 3,136 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் 619 பெண்கள் மற்றும் 194 குழந்தைகள் அடங்குவர். 13,979 பேர் காயம் அடைந்துள்ளனர் என லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *