அமைச்சர் விஜிதவுக்கு உதய கம்மன்பில சவால் !
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத்துக்கு பிவித்துரு ஹெல உறும்ய தலைவர் உதய கம்மன்பில சவால் விடுத்துள்ளார்.
பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில கடந்த வாரம் தெரிவித்ததைப் போன்று, இன்று (28) ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். ஐ. இமாம் தலைமையில் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை என்பதை சுட்டிக்காட்டி அறிக்கையொன்றை வௌியிட்டிருந்தார்.
2023 செப்டம்பர் 05ஆம் திகதி பிரித்தானியாவின் செனல் 4 அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்ட இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு நிகழ்ச்சியின் உண்மைகளை ஆராய்வதற்காக இந்தக் குழு நியமிக்கப்பட்டது.
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ.இமாம் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவில் ஓய்வுபெற்ற விமானப் படைத் தளபதி ஜயலத் வீரக்கொடி, ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ ஏ.ஜே.சோஸா உள்ளிட்டவர்கள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது