சத்தீஸ்கரில் 10 நக்சலைட் கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் குறைந்தது 10 நக்சலைட் கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக இந்திய பொலிஸார் தெரிவித்தனர்.

பந்தர்பதார் வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை (22) அதிகாலை பாதுகாப்புப் படையினர் நக்சலைட் கிளர்ச்சியாளர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது பரஸ்பர துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

குறித்த பகுதியில் இன்னும் தேடுதல் பணி நடைபெற்று வருவதாகவும், 10 உடல்களும் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும் ANI செய்தி நிறுவனம் பொலிஸ் தகவல்களை மேற்கொள்காட்டி தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *