கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பயன்படுத்தியே தாக்கினோம்
ரஸ்யா புதிய கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பயன்படுத்தியே உக்ரைனின் நிப்ரோ நகரின் மீது தாக்குதலை மேற்கொண்டதுஎன என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பிரிட்டனின் நீண்டதூர ஏவுகணைகளை பயன்படுத்தி உக்ரைன் மேற்கொண்ட தாக்குதலிற்கு பதிலடியே இந்த தாக்குதல் என அவர் தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவின் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு ஆயுதங்களை வழங்கும் நாடுகளின் ஆயுததளபாட தொழிற்சாலைகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படும் என புட்டின் எச்சரித்துள்ளார்.
அஸ்ட்ராகன் பகுதியிலிருந்து ஐசிபிஎம் ஏவுகணையை ரஸ்யா செலுத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.நிப்ரோவை பல்வேறு ஏவுகணைகளால் ரஸ்யா இலக்குவைத்தது என உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.
ரஸ்யாவின் ஆறு கேஎச்-101 ஏவுகணைகளை சுட்டுவீழ்த்தியதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
ரஸ்யா மீது தனது ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி அனுமதி வழங்கிய மறுநாள் கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணை தாக்குதல் இடம்பெற்றுள்ளது.