லெபனான் தலைநகர் இஸ்ரேல் மீண்டும் கொடூர தாக்குதல்: ஹிஸ்புல்லா அமைப்பின் மற்றொரு மூத்த தளபதி பலி?
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மற்றொரு மூத்த தளபதி சுஹைல் ஹுசைன் ஹுசைனி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரானுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே ஆயுதங்களைக் கொண்டு செல்வதில் ஹுசைனி முக்கிய பங்கு வகித்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், அவரின் மரணம் தொடர்பில் ஹிஸ்புல்லா தரப்பில் இருந்து எந்த உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை.
பெய்ரூட்டில் (7) 10க்கும் மேற்பட்ட வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெய்ரூட்டின் தெற்கு புறநகர் ஹிஸ்புல்லா வின் கோட்டையாகக் கருதப்படுகிறது. வடக்கு இஸ்ரேலில், ஏவுகணை எச்சரிக்கை சைரன்கள் இரவு முழுவதும் ஒலித்தன. மேலும் பல நகரங்கள் மூடப்பட்ட இராணுவ மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன.
டெல் அவிலின் புறநகர்ப் பகுதிகளை ஏவுகணைகளால் குறிவைத்ததாக ஹிஸ்புல்லா முன்னர் கூறியிருந்தது. அதேபோல் திங்கட்கிழமை பிற்பகுதியில் ஹிஸ்புல்லா 190 எறிகணைகளை வீசியதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
இதேவேளை, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பிற்கு இடையில் போர் ஏற்பட்டு (7) ஓராட்டு ஆகியுள்ள நிலையில், இஸ்ரேல் முழுவதும் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸால் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் கடத்தல்களால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வுகளை இஸ்ரேல் நாள் முழுவதும் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தியது.
இந்த நிகழ்வுகளில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பணயக் கைதிகளாகப் பிடிப்பட்டவர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.