வீதி அபிவிருத்தி சபை தலைவராக தர்மலிங்கம் பாஸ்கரன் நியமினம்!
வீதி அபிவிருத்தி சபையின் தலைவராக தர்மலிங்கம் பாஸ்கரன்,( RDA, Chairman) போக்குவரத்து அமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரியான திரு. தர்மலிங்கம் பாஸ்கரன்,
யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார்.
வரலாற்றில் முதன் முறையாக இலங்கையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிஉயர் பதவியான திறமை அடிப்படையில் தமிழர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த அதி உயர் பதவியானது இதுவரை காலமும் தமிழர்களுக்கு வழங்கப்படவில்லை. திரு பாஸ்கரன் அவர்களின் கடின உழைப்புக்கும் விடாமுயற்சிக்கும் நேர்மைக்கும் கிடைத்த சான்றாகும்.
நேர்மையானவர்களை, திறமையானவர்களை கடமை உணர்வாளர்களை எதுவித
பேதமும் இன்றி உள்வாங்கும் புதிய அரசின் கொள்கையால் தற்போது, வீதி அபிவிருத்தி சபையின் தலைவராக தர்மலிங்கம் பாஸ்கரன்,போக்குவரத்து அமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த நாற்பது வருடங்களாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் (RDA) பொறியியலாளராக பல பதவிகளை திரு. தர்மலிங்கம் பாஸ்கரன் வகித்திருக்கிறார். பணியாற்றிக் கொண்டிருக்கும் போது கூட ஒரே நாளில் அரசியல் காரணங்களுக்காக பதவியில் இருந்து தூக்கியெறியப்பட்டவர்.
இன்றைய புதிய ஆட்சியில், இனம் பாராமல், கட்சி பாராமல், மதம் பாராமல், திறமைக்கு ஏற்ற மக்களின் தேவைக்காக, திறமைசாலிகளை இனம் கண்டு தற்போதய அரசு முன்நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. புதிய அரசின் தகுதியானவர்களை உள்வாங்கும் கொள்கை பாராட்டத்தக்கது.