வைத்தியசாலையில் ரஜினிகாந்த்; லதாவிடம் நலம் விசாரித்த மோடி!

நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து கேட்டறிவதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (01) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

தமிழக பாரதிய ஜனதாக் கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார்.

ரஜினிகாந்த் மற்றும் பிரதமர் மோடியின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அண்ணாமலை, பிரதமர் மோடி, ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வாழ்த்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிகாந்த், தனது இதயத்தை விட்டு வெளியேறும் இரத்தக் குழாயில் ஏற்பட்ட வீக்கத்திற்கு சிகிச்சையளிப்பதற்காக பெருநாடியில் ஸ்டென்ட் வைக்கும் செயல்முறையை மேற்கொண்டார்.

நடிகர் உடல் நிலை சீராக உள்ளது, ஓரிரு நாட்களில் வெளியேற்றப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button