காலத்தால் மறக்க முடியாத கலைஞன்: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் இன்று

தமிழ் சினிமாவின் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாள் இன்று.

1928ஆம் ஆண்டு ஒக்டோபர் 1ஆம் திகதி சின்னையா மன்ராயருக்கும் ராஜமணி அம்மாளுக்கும் நான்காவது மகனாக விழுப்புரத்தில் பிறந்தார்.

சிறு வயதில் மேடை நாடகங்களில் நடித்தார்.

https://www.youtube.com/watch?v=kAxZhTtTqdk

பராசக்தி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். முதல் திரைப்படமே 175 நாட்கள் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடியுள்ளது.

அதன் பின் தொடர்ந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் அரசியலிலும் கால் பதித்தார்.

திருமண வாழ்க்கையைப் பொறுத்தவரையில், ராம்குமார், பிரபு, சாந்தி, தேன்மொழி என நான்கு பிள்ளைகள் இவருக்கு.

இறுதியாக அவர் 1999ஆம் ஆண்டில் வெளிவந்த படையப்பா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

2001 ஜூலை 21ஆம் திகதி அவரது 72 வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

அன்றும் இன்றும் என்றும் காலத்தால் அழிக்கமுடியாத திலகம் நடிகர் திலகம்!

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button