ட்ராகன் கேப்சூல் விண்கலம்; சுனிதா வில்லியம்ஸை மீட்க விண்வெளிக்குப் புறப்பட்டது

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் கடந்த மாதம் 5ஆம் திகதி விண்வெளி மையத்துக்குச் சென்றனர்.

கடந்த மாதம் 22ஆம் திகதி பூமிக்குத் திரும்ப வேண்டிய இவர்கள் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பூமிக்குத் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

அவர்களை மீட்டு பூமிக்கு அழைத்து வருவதற்கான விண்கலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு விண்ணில் ஏவப்பட்டது.

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ட்ராகன் கேப்சூல் எனப்படும் விண்கலமே நேற்றிரவு புளோரிடாவின் விண்வெளி நிலையத்திலிருந்து விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

க்ரூ-9இல் இடம்பெற்ற நான்கு வீரர்கள் இதில் பயணமாகியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button