இலங்கை

யாழ்., முக்கிய வீதிகளை மீண்டும் திறக்குமாறு ஜனாதிபதியிடம் அங்கஜன் வலியுறுத்தல்

யாழ்ப்பாணத்தின் முக்கிய வீதிகளை மீண்டும் திறக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வலியுறுத்தியுள்ளார்.

வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் வீதிகள் திறப்பது நல்லிணக்கத்தையும் பிராந்திய அபிவிருத்தியையும் பலப்படுத்தும் என இராமநாதன் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

“கொழும்பின் சமீபத்திய வீதி அணுகல் சீர்திருத்தங்களுக்கு இணங்க, யாழ்ப்பாணத்தின் முக்கிய வீதிகளை மீண்டும் திறக்குமாறு ஜனாதிபதி @அனுராதிசநாயக்கவிடம் நான் வலியுறுத்த விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

கொழும்பில் உள்ள முக்கிய வீதிகளை இன்று முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டதை அடுத்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள சர் பரோன் ஜயதிலக்க மாவத்தை மற்றும் ஜனாதிபதி மாவத்தையை திறக்குமாறு ஜனாதிபதி பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.