கவிதைகள்

தன்னலமல்லவே! சொல் குதம்பாய்!!… கவிதை… சங்கர சுப்பிரமணியன்

நானும் நண்பர்கள் சிலரும் சேர்ந்து
உணவு சமைத்திட முடிவு செய்தோம்
எங்களுக்கு வேண்டியவற்றை வாங்கி
எங்களுக்காக சமையல் செய்தோம்

திருக்குறளை நாங்கள் படித்ததில்லை
எனவே விருந்தோம்பல் பற்றி தெரியாது
நாங்கள் சமைத்ததை நாங்கள் உண்ண
விருந்தோம்பலை ஏன் எண்ண வேண்டும்

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்போம்
எம்மவரை என்றுமே சேர்க்க மாட்டோம்
எம்மவருக்கு அகராதியில் ஒருபொருள்
வீணய் ஏதும் நீவிர் கற்பனை செய்யாதீர்

எல்லோரையும் ஒன்றென்று நினைத்தால்
எனக்கு அதனாலென்ன பலன் கிடைக்கும்
கூட்டம் எனது பிடிக்குள் இருக்கும்வரை
என்னை மீறி வேறு எதுவும் நடந்திடாதாம்

இந்த மந்திரத்தை கற்றுக் கொண்டேன்
யார் என்ன நினைப்பார் கவலையில்லை
நானே என்னை முன்னிறுத்திச் செய்தால்
தன்னலமா சொல்லிவிடு நீ என் குதம்பாய்

சங்கர சுப்பிரமணியன்

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *