பலதும் பத்தும்

கொலைசெய்து விட்டு கள்வன் என 119 ற்கு தகவல்

வாரியபொல பிரதேசத்தில் 119 அவசர தொலை பேசி சேவைக்கு கள்வன் ஒருவன் பிடிபட்டுள்ளதாக தகவல் வழங்கப்பட்ட நிலையில் அங்கு சென்ற பொலீசார் சடலம் ஒன்றையே மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இது பற்றி மேலும் தெரிய வருவதாவது,
வாரியபொல, வல்பாலுவ, பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் திருடன் ஒருவனைப் பிடித்து வைத்துள்ளதாக 119 என்ற அவசர பொலீஸ் தொலைபேசிச் சேவைக்கு தகவல் கொடுக்கப்படுள்ளது. உடன் விரைந்த பொலீசார் அங்கு சென்ற போது ஒருவர் பிணமாக உள்ளதை கண்டுள்ளனர். விசாணைகளின் பின் இவர் சுந்தரகம, அவிலேகம என்ற இடத்தைச் சேர்ந்த 33 வயது நபர் எனத் தெரிய வந்துள்ளது.

மேற்படி மரணித்தவர் சம்பவத்தில் சந்தேக நபராகக் கருதப்படுபவரின் மனைவியுடன் தகாத தொடர்பில் உள்ளவர் எனத் தெரிய வந்துள்ளது. சந்தேக நபர் தனது வீட்டில் மறைந்திருந்துஇ மரணித்தவர் தனது வீட்டுக்கு வரும் போது சுத்தியல் ஒன்றால் தலையில் தாக்கியுள்ளதாகவும் ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 36 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.