தாக்குதலுக்கு இலக்கான ஹெஸ்பொல்லா தலைவர் பலி: இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு

லெபனானின் பெய்ரூட் மீது இஸ்ரேல் மேற்கொண்ட பாரிய வான்தாக்குதலில் ஹெஸ்பொல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

ஆனாலும் லெபனானிலிருந்து எந்தவொரும் தகவலும் வெளியாகவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹெஸ்பொல்லாவின் மத்திய தலைமையகத்தைத் தாக்கியதாகக் கூறி லெபானான் தலைநகர் பெய்ரூட்டை இலக்கு வைத்து இஸ்ரேல் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியது.

இஸ்ரேல் நஸ்ரல்லா ஆரம்பத்தில் நன்றாக இருப்பதாகவும், உயிர் பிழைத்ததாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால் பல மணிநேரங்களின் பின்னர் அவரது இறப்பு இஸ்ரேலால் உறுதிப்படுத்தப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button