வீட்டில் புறாக்கள் கூடு கட்டினால் இதெல்லாம் நடக்குமா!: சாஸ்திரம் கூறுவது என்ன?
பொதுவாக வீடுகளில் புறா, சிட்டுக்குருவி ஆகியன கூடு கட்டுவது இயல்பு. சிலருக்கு இவ்வாறு பறவைகள் கூடு கட்டினால் நன்மையா, அல்லது தீமையா என்று புரியாமல் இருக்கும்.
உண்மையில் பறவைகள் மற்றும் விலங்குகள் தெய்வ அம்சம் பொருந்தியதாகப் பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் புறாக்கள் தேவர்களின் ரூபமாகவும் ரிஷிக்களின் மறு உருவமாகவும் பார்க்கப்படுகின்றன.
அப்படிப்பட்ட புறாக்கள் கூடு கட்டினால் துரதிர்ஷ்டம் கூட அதிர்ஷ்டமாக மாறிவிடும் என கூறப்படுகிறது.
வீடுகளில் கூடு கட்டியிருக்கும் புறாக்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுப்பது செல்வ செழிப்பை அள்ளிக் கொடுக்கும்.
அதனால் எந்தவொரு பறவையின் கூட்டையும் அழிக்கக் கூடாது.
திருமணமாகாதவர்கள் புறாக்களுக்கு உணவளிக்க வேண்டும். அப்படி செய்தால் கல்யாணம் கைகூடும்.
அதேநேரம் கூடு இல்லாமலே புறாக்கள் உங்கள் வீட்டுக்கு வந்து சென்றால் அது அழிவை ஏற்படுத்துவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
![]()