வவுனியாவில் கடத்திச் செல்லப்பட்ட குடும்ப பெண்: வானுடன் நால்வர் கைது

வவுனியாவில் இருந்து குடும்ப பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்ட நிலையில், குறித்தப் பெண் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வானும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, கொக்குவெளி, அரசடி வீதியில் வசித்து வந்த குடும்ப பெண் ஒருவரை யாழ்ப்பாணத்தில் இருந்து வான் ஒன்றில் வந்த குழுவினர் கடத்திச் சென்றுள்ளனர்.

வீட்டில் இருந்த பெண்ணின் மாமியார் பெண்ணை தூக்கிச் சென்றவர்களை விரட்டிய போது அவரை தாக்கி விட்டு சென்றுள்ளனர்.

இதன்பின் வவுனியா தலைமைப் பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் விரைந்து செயற்பட்டு கடத்திச் செல்லப்பட்ட பெண்ணை மீட்டுள்ளனர்.

மிகவும் துரிதமாகச் செயற்பட்டு பளைப் பகுதியில் வைத்து வானை மடக்கிப் பிடித்ததுடன், குறித்த பெண்ணையும் மீட்டுள்ளனர்.

இதன்போது கடத்தலுக்கு பயன்படுத்த வாகனம் பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன், நான்கு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மணியந்தோட்டம், இருபாலை, சுன்னாகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நான்கு பேரையும் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button