வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட 15 அடி நீளமுள்ள இராட்சத முதலை

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

சீரற்ற வானிலை காரணமாக சுமார் 40,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குஜராத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக குடியிருப்பு பகுதியில் முதலையொன்று புகுந்துள்ளது.

சுமார் 15 அடி நீளம் கொண்ட இராட்சத முதலையை பார்த்து அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் வனத்துறையினருக் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இராட்சத முதலையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு, அதனை பாதுகாப்பான இடத்தில் விடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button