வாசலில் தொங்கவிடப்படும் எலுமிச்சை, மிளகாய்
பல பேர் வீட்டு வாசற்படியில் மிளகாய், எலுமிச்சம்பழம் போன்றவற்றை கட்டித் தொங்கவிடுவர்.
இதற்கு ஆன்மீக காரணம் மட்டுமில்லாமல் அறிவியல் காரணமும் உள்ளன.
அதாவது, பொறாமை பிடித்தவர்கள், கெட்டது நினைப்பவர்களின் பார்வையிலிருந்து தப்பவே பச்சை மிளகாய், எலுமிச்சையை வாசலில் கட்டி வைப்பார்கள்.
எலுமிச்சைக்கும் மிளகாய்க்கும் எதிர்மறையை ஈர்க்கும் தன்மை அதிகம் உண்டு.
லட்சுமியின் சகோதரியான அலட்சுமி என்னும் மூதேவிக்கு புளிப்பு, காரம், நெருப்பு என்றால் மிகவும் பிடிக்குமாம்.
எனவே வீட்டு வாசலில் கரி, மிளகாய், எலுமிச்சை ஆகியவற்றை கட்டி தொங்கவிடும்போது, அதனை வாசற்படியிலேயே சாப்பிட்டுவிட்டு சென்றுவிடுவாளாம். இதனால் வீட்டில் வறுமை அண்டாதாம்.
சிவப்பு அல்லது கறுப்பு கயிற்றைக் கொண்டே இவற்றைக் கட்டித் தொங்கவிட வேண்டும்.
எலுமிச்சை மற்றும் மிளகாயை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை வேளையில் மாற்ற வேண்டும்.
பச்சை மிளகாய் 7அல்லது 9 எனும் எண்ணிக்கையில் ஒரு முனை அந்தப் பக்கம் ஒரு முனை இந்தப் பக்கம் பார்க்கும் விதமாக கட்ட வேண்டும்.
இதற்கான அறிவியல் காரணம் என்னவென்றால், எலுமிச்சை மற்றும் பச்சை மிளகாயில் விட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளதோடு இரண்டும் பூச்சிகளைக் கொல்லும் தன்மை கொண்டவை.
இவற்றை வாசலில் கட்டி தொங்கவிடும்பொழுது நுளம்பு, ஈ, விஷப் பூச்சிகள் என எதுவும் வீட்டுக்குள் வராது எனவும் கூறப்படுகிறது.

![]()