தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளதா?: சுமந்திரன் விளக்கம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளதாக பெரியளவிலான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் தெளிவுபடுத்தி ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளதாக பெரியளவிலான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிதியானது குறிப்பிடப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டது போன்ற தோற்றப்பாடு வேண்டுமென்றே உருவாக்கப்படுகின்றது.

பன்முகப்படுத்தப்பட்ட அபிவிருத்தி நிதி, மற்றும் பல்வேறு அபிவிருத்தி நிதிகள் ஜனாதிபதி செயலாகத்தால் இவ்வருடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது.

இதற்கு உதவியாக அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் அபிவிருத்திக்காக முன்மொழிவுகள் கோரப்பட்டிருந்தன.

இக்கோரிக்கைகளின் அடிப்படையில் வெவ்வேறு தொகைகள் ஜனாதிபதி செயலாகத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இப்பணங்கள் மேற்சொன்ன அபிவிருத்தி பணிகளுக்காக நேரடியாக மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பப்படுகின்றதே தவிர எந்த நாடாளுமன்ற உறுப்பிருக்கும் நேரடியாக கொடுக்கப்படவில்லை என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button