நல்லூரில் குவிந்த பக்தர்கள்; சிறப்பாக இடம்பெற்ற சந்தான கோபாலர் உற்சவம்

நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ 20ம் திருவிழாவான இன்றைய தினம் புதன்கிழமை காலை சந்தான கோபாலர் உற்சவம் நடைபெற்றது.

காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து தங்க எருது வாகனத்தில் எழுந்தருளிய சந்தான கோபாலர் உள் வீதியுலா வந்து , தொடர்ந்து வெளி வீதியுலாவும் வந்தார்.

தொடர்ந்து ஆலய உள்வீதியில் பட்டி பொங்கல் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

சந்தான கோபாலர் உற்சவத்தில் நூறுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சந்தான கோபாலரின் அருள் காட்சியினை கண்டு களித்தனர்.

மேலும், நல்லூர் மகோற்சவ திருவிழாவின் தேர் திருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Oruvan

Oruvan

Oruvan

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button