ஒவ்வொரு விளக்கையும் தனித்தனியாக ஏற்ற வேண்டும்
வீடுகளில் விளக்கேற்றுவது என்பது மங்களகரமான ஒரு விடயம் ஆகும்.
ஆனால், விளக்கேற்றுவதற்கென்று நேரம், முறை போன்றன உள்ளன.
அந்த வகையில், வீடுகளில் விளக்கேற்றுவதற்கு சரியான நேரம் காலை 5 மணி முதல் 7 மணி வரையாகும்.
அதாவது, சூரியன் உதிப்பதற்கு முன்னர் வீட்டில் விளக்கேற்றுவது நன்மையளிக்கும்.
தலைக்கு குளித்துவிட்டு விளக்கேற்றுவது மிகவும் சிறந்தது.
அதேபோல் மாலை 5 மணி முதல் 7 மணி வரையில் விளக்கேற்றினால் நன்மையளிக்கும்.
எப்பொழுதும் விளக்கு கிழக்கு திசை நோக்கியும் விளக்கு ஏற்றுபவர்கள் மேற்கு திசை பார்த்தபடியும் இருக்க வேண்டும்.
இறந்தவர்களின் புகைப்படங்களுக்கு விளக்கேற்றும்போது வடக்கு திசையில் ஏற்ற வேண்டும்.
வீட்டின் நிலை வாசலில் விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, பிறகுதான் பூஜை அறையில் ஏற்றி வைக்க வேண்டும்.

ஒரு விளக்கிலிருந்து இன்னொரு விளக்கை ஏற்றும் தவறை ஒருபோதும் செய்யக்கூடாது. ஒவ்வொரு விளக்கையும் தனித்தனியாக ஏற்ற வேண்டும்.
விளக்கு எரிய ஆரம்பித்தவுடன் திரியை தட்டவோ அல்லது நிமிர்த்தி வைக்கவோ கூடாது. இவ்வாறு செய்தால் தோஷங்கள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
எப்பொழுதும் விளக்கில் எண்ணெய் இருந்துகொண்டே இருக்க வேண்டும்.
விளக்கை அணை எனக் கூறுவது தவறு. விளக்கை குளிரவை என்றே சொல்ல வேண்டும்.
விளக்கை பெண்களே ஏற்றி பெண்களே அணைப்பது சிறந்தது. ஆனால், வாயினால் ஊதி அணைக்கக்கூடாது.
வெறுங்கையினால் விளக்கை அணைக்கக்கூடாது. திரியின் அடிப்பகுதியை பின்புறமாக இழுத்தால் தீச்சுவாலை மெதுவாக குறைந்து எண்ணெயில் அமிழ்ந்துவிடும்.
எந்தக் காரணம் கொண்டும் வீட்டில் விளக்கு ஏற்றிய பின்னர் தலை சீவக்கூடாது, வீட்டை சுத்தம் செய்யக் கூடாது. சுமங்கலிப் பெண்கள் வெளியே செல்லக்கூடாது, வாசலில் அமர்ந்து பேன் பார்க்கக்கூடாது, கடன் கொடுக்கவோ வாங்கவோ கூடாது.

![]()