முச்சந்தி

மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் குற்றச்சாட்டுக்களை மறுக்கும் அரசாங்கம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், முன்வைத்த குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.

இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் முழுமையான அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.

ஜனாதிபதி தேர்தல் நெருங்கியுள்ள நிலையிலேயே , ஐநா மனித உரிமைகள் பேரவையின் இந்த அறிக்கை வெளியாகியிருந்தது.

மனித உரிமைகள் பாதுகாப்பு முறையைசீர்திருத்துவதாக உறுதியளித்த போதிலும், இலங்கை அரசாங்கம் அதனை இன்னும் செய்யாமல் இருப்பதாக அந்த அறிக்கையில்
குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2023 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டங்கள் மூலம் பாதுகாப்புப் படைகளுக்கு பரந்த அதிகாரங்களை வழங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கருத்து சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்படுத்தல் மீதான கட்டுப்பாடுகளையும் இலங்கை அரசாங்கம் விரிவுபடுத்தியுள்ளதாக ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாகவும், கைதிகளுக்கு எதிரான சித்திரவதைகள், அதனால் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பிலும் ஐ.நா.அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button