கனடாவில் யாழ். தமிழ் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை: இரு சிறுவர்கள் கைது

கனடாவில் தமிழர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவருக்கு எதிராக பொலிஸார் முதல் நிலை குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

கடந்த ஜூலை ஆறாம் திகதி ஸ்காப்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 28 வயதான சுலக்சன் செல்வசிங்கம் என்பவர் கொல்லப்பட்டார்.

உயிரிழந்தவர் பிக்கரிங் நகரைச் சேர்ந்தவராவார். அத்துடன், அவர் யாழ்ப்பாணத்தை பின்னணியாக கொண்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவருக்கு எதிராக டொரான்டோ பொலிஸார் முதல்நிலை குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

11 துப்பாக்கிச் சூடு குற்றங்களுடன் அவர்களை தொடர்புபடுத்தும் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். அவற்றில் எட்டு குற்றங்கள் கனடா தின நீண்ட வார இறுதியில் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் 15 மற்றும் 16 வயதான இருவர் கடந்த 21ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button