பாகிஸ்தானின் இருவேறு பகுதிகளில் விபத்துக்கள் – 37 பேர் வரையில் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈரானில் இருந்து சுமார் 70 பக்தர்களை ஏற்றிக்கொண்டு நேற்று பஞ்சாப் நோக்கி பயணித்த குறித்த பஸ் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.

இந்நிலையில் குறித்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் 35 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றும் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, குழந்தைகள், பெண்கள் உட்பட 26 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button