தாய்லாந்தில் பெண் பத்திரிகையாளரை தலையில் அடித்த அரசியல்வாதி: கேள்வி பிடிக்கவில்லை என்பதே காரணம்

தாய்லாந்தின் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போது பலத் பிரசாரத் எனும் கட்சியின் தலைவருமான பிரவிட் வாங்சுவான் பெண் பத்திரிகையாளர் ஒருவரை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தின் புதிய பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா பற்றி அரசியல் தலைவரான வாங்சுவானிடம் குறித்த பெண் பத்திரிகையாளர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அந்தக் கேள்வியால் கோபமடைந்த அவர், பெண் பத்திரிகையாளரின் தலையில் அடித்துவிட்டு கோபத்துடன் சென்று காரில் ஏறிக்கொண்டார்.

இச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அந்நாட்டு நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.

பெண் பத்திரிகையாளர் ஒருவரை அடித்த சம்பவம் தொடர்பில் தாய்லாந்து பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button