அர்ச்சுனாவுக்குப் பைத்தியம் முற்றிவிட்டது அவரைக் குணப்படுத்த நான் எப்போதும் தயார்

“பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா எங்களுடைய பிள்ளை. அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது; அவரை என்னிடம் அழைத்து வாருங்கள், சரிசெய்கிறேன்” என யாழ்ப்பாண மக்களிடம் ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா. பிரபாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு ‘வொய்ஸ் ஒப் மீடியா’வில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
“யாழ்ப்பாணம் சாவகச்சேரி மக்கள் தங்களுடைய எதிர்காலத்தில் ஏதாவது மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு வாக்களித்தார்கள். ஆனால் அர்ச்சுனா, வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, தமிழர்களின் இனப்படுகொலைக்குக் காரணமாக இருந்த ராஜபக்சக்களுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு, ராஜபக்சக்களையே ‘தலைவர்’ என்று கூறுகின்றார்.
அவருக்குப் பைத்தியம் முற்றிவிட்டது. நாய்களைப் பிடித்துச் செல்லும் வாகனத்திலாவது அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்; அவருக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அர்ச்சுனாவின் எதிர்காலமே வீணாகிவிடும்.
அதுமட்டுமன்றி, அவருக்கு அரசியல் எவ்வாறு செய்ய வேண்டும் என்றும் கற்றுக்கொடுக்க வேண்டும். ஏனெனில், அவர் சமூக வலைத்தளங்களில் நான் உட்படப் பல அரசியல் தலைவர்களைப் பற்றி மிகவும் மோசமாகப் பேசிவருகின்றார்” என்றார்.
![]()