இலங்கை
22 வது திருத்தம் – சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வது நம்பிக்கையை ஏற்படுத்தும்

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவது, நீதிமன்றத்தின் மீதும் மக்கள் மீதும் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும் என பெல்லன்வில ரஜமஹா விகாராதிபதி, சிங்கப்பூரின் தலைமைச் சங்கநாயக கலாநிதி பெல்லன்வில தம்மரதன நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புத் திருத்தம் குறித்துத் தேரருக்குத் தெளிவுபடுத்துவதற்காக ‘சுயாதீன இயக்க மையத்தின்’ பிரதிநிதிகள் குழுவினர் பெல்லன்வில ரஜமஹா விகாரையில் அவரைச் சந்தித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மகாநாயக்க தேரர்களால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் அரசாங்கம் நடந்துகொண்ட விதம் குறித்துத் தான் பெரிதும் கவலையடைவதாகவும் தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
![]()