வேட்புமனுத் தாக்கல் நிறைவு -ஆட்சேபனைகளைத் தெரிவிக்க அவகாசம்!

2024ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை  நிறைவு பெற்றது.

ராஜகிரியில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகக் கேட்போர் கூடத்தில் இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகியது.

அத்துடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தை சுற்றி பாலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 40 வேட்பாளர்கள் நேற்று நண்பகல் 12 மணிவரை தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை ஏற்கும் போது முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகளை பரிசீலித்த பின்னர் ஜனாதிபதித் தேர்தலுக்குத் தெரிவான வேட்பாளர்களை அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தொடா்ந்து சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் அடையாளங்கள் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *