தென்சீனக் கடல் விவகாரம்; உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம்
தென்சீனக் கடல் விவகாரத்தில் தனது உரிமையை விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்று பிலிப்பைன்ஸ் வலியுறுத்தியுள்ளது.
அங்கு செகன்ட் தாமஸ் ஷோல் தீவில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள தனது படையினருக்குத் தேவையான பொருள்களை விநியோகம் செய்வது தொடர்பாக சீனாவுடன் பிலிப்பைன்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.
அந்தத் தீவில் உள்ள பிலிப்பீன்ஸ் படையினருக்கான அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்வதற்கு முன்பு அதுகுறித்து தன்னிடம் தெரிவிக்க வேண்டும் என்று சீனா முன்வைத்த பரிந்துரையை அது ஏற்க மறுத்தது.
தென்சீனக் கடலின் பெரும்பாலான பகுதிகளைச் சீனா உரிமை கொண்டாடுகிறது. அதில் செகன்ட் தாமஸ் ஷோலும் அடங்கும்.
அத்தீவு பிலிப்பைன்ஸின் பலாவான் தீவுக்கு ஏறத்தாழ 200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
சீனாவுக்கும் அத்தீவுக்கும் இடையிலான தூரம் 1,000 கிலோமீட்டருக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தீவுக்கு அருகில் உள்ள கடற்பகுதி மீன்வளம் நிறைந்தது.
கடந்த சில மாதங்களாக அங்கு சீனக் கடற்படைக்கும் பிலிப்பைன்ஸ் கடற்படைக்கும் இடையே பலமுறை மோதல்கள் நிகழ்ந்துள்ளன.