கழிவு அடங்கிய பலூன்களை அனுப்பும் வட கொரியா; எதிர்ப்பு பிரசாரத்தை முன்னெடுக்கும் தென் கொரியா
தென் கொரியாவை நோக்கி கழிவுகள் அடங்கிய பலூன்களை வட கொரியா மீண்டும் அனுப்பத் தொடங்கியுள்ளதாக சியோல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இரு கொரியாக்களுக்கு இடையே பலத்த பாதுகாப்புடன் காணப்படும் எல்லையில் தென் கொரியா தமது எதிர்ப்பு பிரசார ஒளிபரப்பை முடுக்கிவிட்டுள்ளதாக இராணுவம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, ”வடக்கு கழிவுகளை சுமந்து செல்லும் பலூன்களின் மற்றுமொரு தொகுதியை அறிமுகப்படுத்துகிறது” என தெற்கின் கூட்டுப் பணியாளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த கழிவுகளை தொடவேண்டாமெனவும் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் தெற்கிற்கு இடையிலான பனிப்போரின் காரணமாக கடந்த மே மாதம் இறுதியில் இருந்து சுமார் 2000 கழிவுகளை சுமந்து செல்லும் பலூன்களை வடகொரியா தென் கொரியாவை நோக்கி அனுப்பியுள்ளது.
இதன்படி, வட கொரியா தெற்கை நோக்கி கழிவுகள் நிரப்பப்பட்ட பலூன்களை அனுப்பும் ஒன்பதாவது சந்தர்ப்பம் இதுவாகுமென சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.