பாதாள உலகக் குழுக்களின் செயல்பாடுகள் அதிகரிப்பு; அவசரமாக அழைக்கப்பட்ட இராணுவம் – அடுத்து என்ன?
அம்பலாங்கொடை மற்றும் அதுருகிரிய பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
பாதாள உலக குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக கடுமையாக சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அவர்கள் மறைந்திருக்கும் இடங்கள் தொடர்பில் கண்டறிந்து அங்கு விசேட சுற்றிவளைப்புகளை பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இராணுவத்தினரும் தேவைக்கேற்ப பயன்படுத்தப்படுவதற்கான அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் பாதாள உலக குழுக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கமும் பாதுகாப்பு படைகளும் இணைந்து செயல்படுவதாகவும் பாதாள உலக குழுக்களை கட்டுப்படுத்துவது அவசியமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.