அபோபிஸ் எரிகல்; பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?
கோள்கள், துணைக் கோள்களையும் தாண்டி பல்வேறு எரிகற்களும் பூமியைச் சுற்றி வருகின்றன. அவற்றில் சுமார் 4700 எரிகற்கள் மிகவும் ஆபத்தானவை என கண்டறியப்பட்டுள்ளன.
அந்த வகையில் 2004ஆம் ஆண்டில் அரிசோனாவில் பூமிக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய எரிகல் ஒன்று புவியின் சுற்றுவட்டப் பாதைக்கு நிகராக சுற்றி வருவதைக் கண்டறிந்துள்ளனர்.
தொடக்கத்தில் இதற்கு ‘99942’ என பெயரிடப்பட்டது. அதன் பின்னர் ‘அபோபிஸ்’ என பெயர் மாற்றப்பட்டது. அபோபிஸ் என்றால் எகிப்திய வரலாற்றில் தீமை மற்றும் குழப்பதை ஏற்படுத்திய பேய் பாம்பின் பெயர்.
335 மீட்டர் அகலம் கொண்டு எஸ் வடிவம் கொண்ட இந்த எரிகல், 2029இல் பூமிக்கு அருகில் வரும், 2036இல் மீண்டும் பூமிக்கு அருகில் வரும். ஆனால் பூமிக்கு பெரிதாக எந்த ஆபத்தும் வராது எனவும்,2068 ஆம் ஆண்டில் இலேசான ஆபத்து ஏற்படலாம் எனவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
![]()