சீனா மீது பகிரங்கமாக குற்றம் சுமத்தும் நேட்டோ; கோரிக்கையொன்றையும் முன்வைத்துள்ளது
நேட்டோவிற்கும் சீனாவிற்கும் இடையில் எதிரெதிர் கருத்து வேறுபாடுகள் காணப்படினும், தற்போது அந்த நிலைமை தீவிரமடைந்துள்ளது.
அமெரிக்காவின் வோஷிங்டனில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டிற்குப் பிறகே இந்நிலைமை இவ்வாறு தீவிரமடைந்துள்ளது.
அங்கு சீனா மீது நேட்டோ கடும் குற்றச்சாட்டை முன்வைத்து கூட்டறிக்கையை வெளியிட்டது.
பல தசாப்தங்களாக சீனாவை ஒரு தொலைதூர அச்சுறுத்தலாகக் கருதிய பின்னர், சீனா இப்போது உக்ரெயன் மீதான ரஷ்யாவின் போருக்கு முக்கியமான உதவியாளராக மாறியுள்ளது என்று நேட்டோ குற்றம் சுமத்தியுள்ளது.
ரஷ்ய இராணுவ சக்தியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முக்கியமான ஆயுதங்கள் மற்றும் பிற தொழில்நுட்பங்களின் ஏற்றுமதியை நிறுத்துமாறு நேட்டோ சீனாவிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஜூலை 10ஆம் திகதி வெள்ளை மாளிகையின் இரவு விருந்திற்கு செல்வதற்குச் சற்று முன்னதாக கூட்டணியின் 32 தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்ட அறிக்கையில் இந்த அறிக்கை அடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவு அளித்ததாக சீனாவுக்கு பகிரங்கமாக குற்றம் சுமத்தப்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
![]()