மனித மூளையில் சிப் பொருத்தப்படும் நியூரோ தொழில்நுட்பம்: இயற்கைக்கு புறம்பானதா?
பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க், கடந்த 2016ஆம் ஆண்டு நியூரோலிங்க் எனும் நியூரோ தொழில்நுட்ப நிறுவனத்தை தொடங்கினார்.
சாதாரண மனித ஆற்றலை கணினி மற்றும் செயற்கை நுண்ணறிவுடன் பன்மடங்கு உயர்த்துவதுதான் இந் நிறுவனத்தின் குறிக்கோள்.
மனிதர்களின் மூளையில் சிப் பொறுத்தி அவர்களை எண்ணங்களால் கணினி, மடிக்கணினி ஆகிய சாதனங்களை பயன்படுத்த வைக்கும் எண்ணக்கருவில் தொடங்கப்பட்டது.
இதன் மூலம் பார்கின்சன் மற்றும் ALS போன்ற நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடியும்.
அந்த வகையில் இந்த சிப்பை முதன்முதலில் விலங்குகளுக்கு பொருத்தினார்கள்.
அதன் பின் 8 வருடங்களாக பக்கவாத பாதிப்பு கொண்ட ஒருவருக்கு நியூரோலிங்க் அறுவை சிகிச்சையினால் கணினியில் சதுரங்கம் போன்ற விளையாட்டுக்களை விளையாட முடிகிறது.
இதன் மூலம் கணினிக்கும் மனிதனுக்கும் இடையில் ஒரு தொடர்பு உருவாகும். இதனால் கண் பார்வையற்றவர்களுக்கு கூட டெலிபதி மூலம் அவர்கள் நினைத்ததை பரிமாற முடியும்.
இந்த சிப் தானாக அப்டேட் ஆகுமாறு உருவாக்கப் போகிறார்கள். என்னதான் இது தொழில்நுட்பமாக இருந்தாலும் இயற்கைக்கு மாறானதாக இருக்கிறது. இதனால் எதிர்காலத்தில் மனித இயல்பு பாதிக்கப்படும்.
![]()