இலங்கை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் மாநாட்டிற்கு ஜனநாயக போராளிகள் கட்சி பூரண ஆதரவு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் எதிர்வரும் 30ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள மாநாட்டிற்கு ஜனநாயக போராளிகள் கட்சி பூரண ஆதரவு வழங்கவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் சி.வேந்தன் தெரிவித்துள்ளார்.

வடமராட்சியில் உள்ள தனது இல்லத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் தந்தை செல்வநாயகம் அரங்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தப் போராட்டத்தில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

யுத்தம் நிறைவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் யுவதிகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும், பல பெற்றோர் தங்களது பிள்ளைகளை இராணுவத்தினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் சி.வேந்தன் கூறினார்.

அதேபோன்று, பல பெண்கள் தங்களது கணவர்களையும் இராணுவத்தினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும், இவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்களது உறவுகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

எதிர்வரும் 30ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வித்தியாசமான முறையில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும், அந்த மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் சி.வேந்தன் அழைப்பு விடுத்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button