பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக சிறுநீரகத்தை விற்ற தந்தை
பிள்ளைகளின் எதிர்காலம் கருதி தந்தையொருவர் சிறுநீரகத்தை விற்ற சம்பவமொன்று இந்தியாவின் ஆந்திரா பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
31 வயதான சாரதி ஒருவரே இவ்வாறு சிறுநீரகத்தை விற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.
நிகழ்நிலை ஊடாக கடன் பெற்று நெருக்கடியை எதிர்கொண்ட நிலையிலே, சிறுநீரகத்தை விற்று பணம் பெறுவதற்கான விளம்பரப் பதிவொன்றை சமூக வலைத்தளத்தில் பார்த்துள்ளார்.
இதன்படி, தமது சிறுநீரகத்தை விற்று கடனில் இருந்து விடுபடுவதற்கு குறித்த நபர் தீர்மானித்துள்ளார்.
30 இலட்சம் ரூபா வழங்கப்படும் என அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அறுவை சிகிச்சைக்கு முன்னதாக பயணச் செலவும், அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உறுதியளிக்கப்பட்ட முழுத் தொகையும் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இறுதியில் 50,000 இந்திய ரூபாவை மாத்திரம் அந்த நபர் பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், தமது பொருளாதார பிரச்சினையை மற்றவர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமது பிள்ளைகளுக்கு நல்லதொரு எதிர்காலம் அமையுமென தாம் நம்பியதாகவும், ஆனால், தமது அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், உறுப்பு கடத்தல் வலையமைப்பு தொடர்பில் விழிப்புணர்வுடன் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளர்.
![]()