துப்பாக்கிக் குண்டுகளை இனி கடைகளிலும் வாங்கலாம்

அமெரிக்காவைப் பொறுத்தவரையில், துப்பாக்கி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதோடு, அவ்வப்போது துப்பாக்கிச்சூட்டில் மக்கள் உயிரிழப்பதும் அதிகம்.

ஆனால், இன்னொரு தரப்பினர் பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக துப்பாக்கி அவசியம் என்கின்றனர்.

அமெரிக்காவில் அநேகமானவரிடம் துப்பாக்கி இருப்பதால், அதற்கான குண்டுகள் வாங்குவதில் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனைக் கருத்திற்கொண்டு, ஏடிஎம் இயந்திரத்தில் எவ்வாறு பணம் எடுப்போமோ அதேபோல் துப்பாக்கிக் குண்டுகளையும் உடனுக்குடன் வெண்டிங் இயந்திரம் மூலம் பெற்றுக்கொள்ளும் வசதி மளிகைக் கடைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எப்படியெனில், துப்பாக்கிக்கு சொந்தக்காரர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்து குண்டுகளுக்கான பணத்தை செலுத்தி அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்.

ஏஐ தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய இந்த இயந்திரங்கள் பாசில் ரெகக்னிஷன் மூலமும் வாடிக்கையாளர்களின் அடையாளத்தை உறுதி செய்தும் குண்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த நடைமுறையின் முதற்கட்டமாக டெக்சாஸ், அலபாமா மற்றும் ஒக்லாஹோமா ஆகிய மாகாணங்களில் இந்த கடைகள் நிறுவப்பட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button