ஜம்மு காஷ்மீரில் 1600 கோடி ரூபாய் முதலீடு
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன் ஜம்மு காஷ்மீரில் 1600 கோடி ரூபாய் முதலீடு செய்ய தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
அவருக்குச் சொந்தமான சிலோன் பீவரேஜஸ் நிறுவனம் ஜம்மு காஷ்மீரில் தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்காக இந்த முதலீட்டைச் செய்ய தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது காஷ்மீரில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய முதலீடாகும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு மற்றும் காஷ்மீர், அதன் அற்புதமான நிலப்பரப்புகளுக்கும் வளமான கலாச்சார பாரம்பரியத்திற்கும் பெயர் பெற்றது, இப்போது தொழில்துறை முதலீட்டுக்கான மையமாக மாறி வருகிறது.
முதலீட்டு செயல்முறையை சீராக்க ஒற்றைச் சாளர முறையை அரசாங்கம் செயல்படுத்தியதன் விளைவாக 6,909 விண்ணப்பங்கள் வந்துள்ளன, இது பிராந்தியத்தின் செழிப்பு மற்றும் வளர்ச்சியின் புதிய சகாப்தத்தைக் குறிக்கிறது.
ஏப்ரல் 1, 2021 அன்று தொடங்கப்பட்ட புதிய தொழில்துறை கொள்கையானது, மூலதன முதலீட்டு மானியங்கள் மற்றும் ஜிஎஸ்டி பலன்கள் போன்ற சலுகைகளை வழங்குவதன் மூலம் இந்த முதலீடுகளை ஈர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
துபாயில் உள்ள எமார் குழுமம் ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட பல திட்டங்களில் 500 கோடி இந்திய ரூபாயை முதலீடு செய்ய உள்ளது.
இது குறித்து தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,
“இந்த எழுச்சியானது ஜம்மு மற்றும் காஷ்மீரின் பொருளாதாரத்தில் 1.23 லட்சம் கோடிக்கு ரூபாவிற்கு மேல் புகுத்தலாம் என்பதுடன் தோராயமாக 4.69 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கலாம்.” என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, முரளியின் சிலோன் பீவரேஜஸ் நிறுவனத்தின் 1600 கோடி முதலீட்டு திட்டத்திற்காக கதுவாவில் 25.75 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()