“தேர்தல் பந்தயத்தில் இறுதிவரை ஓடி, டொனால்ட் ட்ரம்பை வீழ்த்துவேன்“: ஜனாதிபதி ஜோ பைடன் உறுதி

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், 2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் போட்டியிலிருந்து இடை விலக வேண்டும் என்று அவரது கட்சியினர் உட்பட அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தான் போட்டியிலிருந்து இடை விலகப் போவதில்லை என அண்மையில் மின்னஞ்சல் மூலம் ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.

இப் பின்னணியில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் ஜோ பைடன் தேர்தலிலிருந்து பின்வாங்க மாட்டேன் என உறுதியாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், “டொனால்ட் ட்ரம்பை வீழ்த்த முடியும் என்பதை நான் நம்பாவிட்டால், மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன். இந்த தேர்தலில் போட்டியிடுவதில் தீவிரமாக உள்ளேன். இந்த பந்தயத்தில் இறுதிவரை ஓடி, டொனால்ட் ட்ரம்பை வீழ்த்துவேன்.

இறுதி வேட்பாளர் தேர்வுக்கு இன்னும் 42 நாட்களும் பொதுத் தேர்தல் தொடங்க இன்னும் 119 நாட்களும் உள்ளன. நமது தீர்மானங்கள் பலவீனமாக இருந்தால் அது ட்ரம்புக்கு சாதகமாக மாறிவிடும். இந்நேரத்தில் நாம் ஒன்றிணைந்து ட்ரம்பை வீழ்த்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button