கங்குலிக்கு வலைவீசும் கல்கத்தா: புதிய பதவியை ஏற்பாரா?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி (ஜூலை 8) தமது 52 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடினார்.

பிசிசிஐ யின் முன்னாள் தலைவரும் தற்போதைய டெல்லி கேப்பிட்டல் ஆலோசகருமான கங்குலியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) நிர்வாகம் வாழ்த்தி சமூக ஊடகங்களில் செய்தியை வெளியிட்டது.

கேகேஆர் இன் தலைமை பயிற்சியாளரான கெளதம் கம்பீர், ராகுல் டிராவிட்டின் ஓய்வை அடுத்து இந்திய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக கேகேஆர் இன் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கங்குலி நியமிக்கப்படுவார் என சமூக ஊடகங்களில் செய்திகள் பரவலாக பகிரப்படுகிறது.

கங்குலி 2008 முதல் 2010 வரை மூன்று முறை கல்கத்தா அணிக்காக விளையாடியிருந்தார்.

என்றாலும், அவர் 2011ஆம் ஆண்டு ஏலத்திற்கு முன்னதாக விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக கம்பீர் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

2011 மற்றும் 2012 இல், கங்குலி புனே வாரியர்ஸ் அணிக்காக விளையாடினார். அதன் பிறகு அவர் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார்.

கங்குலியின் கீழ் வழிநடத்தப்பட்ட இந்திய அணி 2003 இல்உலகக் கிண்ண இறுதிப் போட்டி வரை முன்னேறி அவுஸ்ரேலிய அணியிடம் தோல்விகண்டது. 2000 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை கங்குலி தலைமையிலான இந்திய அணி வெற்றிகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button