பிரான்ஸில் இரண்டாம் சுற்று வாக்குப்பதிவுகள் தீவிரம்: இம்மானுவேல் மெக்ரோனின் அதிகாரம் குறைவது உறுதி
பிரான்ஸில் இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பிரான்ஸின் பிரதான நிலப்பகுதி மற்றும் கோர்சிகா தீவில் நடைபெறும் இந்த வாக்குப்பதிவுகள் இரவு 08 மணிக்கு நிறைவடைகிறது.
அதன்பின்னர் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன. இதன்பின்னர் இன்று நள்ளிரவில் பெரும்பான்மை குறித்த தகவல் வெளியாவதுடன் நாளை அதிகாலை உத்தியோகப்ப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரெனய்ன் போர், உலகளாவிய இராஜதந்திர செயற்பாடுகள் மற்றும் ஐரோப்பாவின் பொருளாதார ஸ்திரத்தன்மையில் இந்த தேர்தல் தாக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனின் மீதமுள்ள மூன்று ஆண்டுகால பதவிக்காலத்தில் அவருக்கான அதிகாரம் குறையும் என உறுதியாகிவிட்டது.
தற்போது நடைபெறும் தேர்தல் என்பது பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் மாத்திரமே. இதன் மூலம் பிரான்ஸி பிரதமர் யார் என்பது தீர்மானிக்கப்படும்.
ஜனாதிபதியும் பிரதமரும் வெவ்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களாக இருக்கும் பட்சத்தில் ஜனாதிபதிக்கான அதிகாரம் குறையும்.
புதிய சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்களை இயற்றுவதில் ஜனாதிபதி சிக்கல்கள் ஏற்படலாம்.
முதல் சுற்று வாக்குப்பதிவுகள் கடந்த மாதம் 30 ஆம் திகதி நடைபெற்ற நிலையில் தேசிய பேரணி கட்சி 33.2 சதவீத வாக்குகளுடன் முன்னிலையில் இருந்தது.
இடதுசாரிகளின் கூட்டணி 28.1 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருந்தது. ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனின் கூட்டணி 21 சதவீத வாக்குகளுடன் பின்தங்கியது.
முதல் சுற்றில் குடியேற்ற எதிர்ப்பு பிரசாரம், தேசிய பேரணி கட்சிக்கு இதுவரை இல்லாதளவில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
தீவிர வலதுசாரி கட்சியான தேசிய பேரணி, இடதுசாரிகளின் கூட்டணி மற்றும் ஜனாதிபதியின் மையவாதக் கூட்டணி என மும்முனை போட்டி நிலவுகிறது.
![]()