ரிமோட் கொண்ட்ரோல் மூலம் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்; முன்னாள் செனட் உறுப்பினர் உட்பட மொத்தம் ஐவர் பலி

பாகிஸ்தானில் கைபர் பக்துன்குவா மாகாணம், பஜாவர் பகுதியில் தமடோலா எனும் இடத்தில் நேற்று புதன்கிழமை அதி சக்தி வாய்ந்த வெடிகுண்டொன்று மர்ம நபர்களால் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக முன்னாள் செனட் உறுப்பினரான இதயத்துல்லா கான் தமலோடா பகுதிக்கு புறப்பட்டு சென்றபோது, அவரது காரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் இதயத்துல்லா கானும் அவருடன் சேர்ந்து மேலும் நால்வரும் பலியாகினர்.

மொத்தமாக இந்த குண்டுவெடிப்பில் 5 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டுமென கைபர் பக்துன்குவா மாகாணத்தின் முதலமைச்சர் அலி அமின் கந்தப்பூர் உத்தரவிட்டுள்ளார்.

ரிமோட் கொண்ட்ரோல் மூலம் இந்த குண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி கண்டனம் தெரிவித்துள்ளதோடு, உயிரிழந்தவர்களுக்கு இரங்கலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Oruvan

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button