படப்பிடிப்பில் கதறி அழுத சிவாஜி: கைகொட்டி சிரித்த வில்லன் நடிகர்
இந்திய சினிமாவில் முன்னணி க்ளாசிக் நடிகராக திகழ்ந்தவர் சிவாஜி கணேசன். நாடக நடிகராக இருந்து, 1952-ம் ஆண்டு வெளியான பராசக்தி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், முதல் படத்திலேயே கைதேர்ந்த நடிகரைபோல் நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றதோடு மட்டுமல்லாமல், தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்திருந்தார்.
பராசக்தி படத்தை தொடர்ந்து ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த பல படங்களில் ஹீரோவாக நடித்த சிவாஜி, முன்னணி இயக்குனர் கூட்டணியில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். ஹீரோவாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த சிவாஜி கணேசன், ஒரு கட்டத்தில், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடிக்க தொடங்கினார். ஹீரோவாக மட்டுமல்லாமல் முக்கிய கேரக்டர்களிலும் நடித்து வெற்றியை கொடுத்தவர் தான் சிவாஜி.
அந்த வகையில், கடந்த ஆர்.வி உதயகுமார் இயக்கத்தில் வெளியான புதிய வானம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். சத்யராஜ் நாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் அவரது உயர் போலீஸ் அதிகாரியாக சிவாஜி கணேசன் நடித்திருந்தார். இந்த படத்தில் முக்கிய வில்லனாக நடிகர் பொன்னம்பலம் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை பொன்னம்பலம் பகிர்ந்துள்ளார்.
படப்பிடிப்பின்போது ஒருநாள் சிவாஜி அங்கு அமர்ந்திருக்க, அந்த வழியாக பொன்னம்பலம் சென்றுள்ளார். அப்போது அவரது பையில் இருந்து சில்லறை காசுகள் விழுந்துள்ளது. அதை எடுத்துக்கொண்டு திரும்பும்போது, டேய் இங்க வாடா என்று சிவாஜி அழைத்துள்ளார். அவரது அழைப்பை ஏற்று பொன்னம்பலம் அவரிடம் சென்றபோது, அங்கிருந்து என்ன எடுத்த என்று கேட்க, காசு எடுத்தேன் சார் என்று பொன்னம்பலம் பதில் கூறியுள்ளார். அதை கேட்ட சிவாஜி எவ்வளவு என கேட்க, ஒரு ரூபாய் என்று பதில் கூறியுள்ளார்.
இதை கேட்ட சிவாஜி, எங்கே காட்டு பார்ப்போம் என்று காசை வாங்கி பார்த்துவிட்டு அழுதுள்ளார். இதனால் பதறிப்போன பொன்னம்பலம், சார் என்னாச்சு என்று கேட்க, நான் இதை பார்த்ததே இல்லடா என்று கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியான பொன்னம்பலம், என்ன சார் சொல்றீங்க, ஒரு ரூபாய் பார்த்தது இல்லையா என்று கேட்க, நான் கேட்டால் காபி பிரியாணி என அனைத்தும் கிடைக்கும்டா, உண்மையாவே நான் காசை பார்த்தது இல்லை என்று சொல்ல, நம்பாத பொன்னம்பலம், கிண்டல் பண்ணாதீங்க சார் என்று கூறியுள்ளார்.
உண்மையாகவே நான் காசை பார்த்தது இல்லை வேற காசு எதாவது இருந்த காட்டு பார்ப்போம் என்று சிவாஜி கேட்க, நான் படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவரிடமும் சென்று, 2 ரூபாய், 5 ரூபாய் காசை வாங்கி வந்து அவரிடம் காட்டினேன். இதை பார்த்த சிவாஜி ரொம்ப சந்தோஷத்தில் இதை நான் எடுத்துக்கட்டுமா என்று கேட்க, என்ன சார் கேட்குறீங்க எடுத்துக்கோங்க என்று பொன்னம்பலம் கூறியுள்ளார். அதன்பிறகு காசை எடுத்து தனது கோட் பாக்கெட்டில் வைத்துள்ளார் சிவாஜி. பொன்னம்பலம் இதை ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
![]()