பைடனிற்கு மேலும் 4 வருடங்களிற்கு ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கான திறமை உள்ளதா? அவுஸ்திரேலியாவின் கருத்து என்ன?

எதிர்வரும் நான்கு வருடங்களிற்கு அமெரிக்க ஜனாதிபதியாக நீடிப்பதற்கான திறன் ஜோபைடனிற்குள்ளது என அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைச்சர் ரிச்சட் மார்லெஸ் தெரிவித்துள்ளார்.

அவருக்கு அதற்கான திறமை உள்ளது அதுதொடர்பில் எந்த பிரச்சினையும் எழாது என நம்புகின்றேன் என ரிச்சட் மார்லெஸ் தெரிவித்துள்ளார்.

உலகில் அமெரிக்காவின் நிலையை கையாள்வதில் பைடன் நிர்வாகம் சிறந்த முறையில் செயற்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் பைடனுடன் நெருக்கமாக இணைந்து செயற்பட்டுள்ளோம் உலகில் அமெரிக்காவின் நிலையை கையாள்தல் மற்றும் சமத்துவம் என்ற விடயங்களை அமெரிக்கா கையாளும் விதம் குறித்து நாங்கள் திருப்தியடைந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

யார் அமெரிக்க தேர்தலில் வெற்றிபெற்றாலும் அவுக்கஸ் கூட்டணி தொடரும் என ரிச்சட் மார்லஸ் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button