இந்தியா

“மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி“: பிரதமர் மோடி

இந்திய அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் மீது மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.

பிரதமர் மோடி மாதந்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் ‘மனதின் குரல்’எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக கடந்த 03 மாதங்களாக இந்த நிகழ்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பிரதமர் மோடி 03 ஆவது முறையாக பதவியேற்றுள்ள நிலையில் மனதின் குரல் நிகழ்ச்சி மீண்டும் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கமைய இன்று காலை 11 மணி அளவில் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இவ்வாறு கருத்துரைத்தார்.

“கடந்த பிப்ரவரி மாதம் முதல் வந்த ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் உங்களுடன் பேசும் இந்த வாய்பபு கிடைக்காமல் போனது குறித்து வருத்தமடைந்தேன்.

தற்போது மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நான் மீண்டும் எனது குடும்ப உறுப்பினர்களான நாட்டுமக்கள் மத்தியில் வந்துள்ளேன்.

2024 மக்களவைத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்துக்கு எனது பாராட்டுக்கள்”

மேலும் அண்மையில் இடம்பெற்ற சர்வதேச யோகா தினம் குறித்தும், அடுத்த வருடம் இடம்பெறவுள்ள பாரீஸ் ஒலிம்பிக் தொடர்பிலும் அவர் பேசினார். தொடர்ந்து அவரது இன்றைய உரையில் டி20 கோப்பையில் இந்தியா அணியின் வெற்றி குறித்து பேசுவார் என்றும் தெரிகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.