உலக சாம்பியனான ‘இந்தியா’; வாழ்த்து கூறிய சினிமா பிரபலங்கள்

டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டி பார்படாஸ் நகரில் நடந்தது. இதில், இந்திய மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகள் விளையாடின. போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.

177 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் விளையாடிய தென்ஆப்பிரிக்க அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்களே எடுத்தது. இதனால், இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி உலக சாம்பியனானது.

இதனையடுத்து, இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன்படி, அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், சல்மான் கான், சித்தார்த் மல்ஹோத்ரா, மகேஷ் பாபு, ஜுனியர் என்.டி.ஆர், பிரபு தேவா, சிம்பு, பிரீத்தி ஜிந்தா, நேகா துபியா, ரவீனா தண்டன், அனன்யா பாண்டே, உள்ளிட்ட பலர் தங்களது சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button