முச்சந்தி

ஐ.நாவில் பாலஸ்தீன முழு உறுப்புரிமை அங்கீகாரம்: அவுஸ்திரேலியா ஆதரவு – அமெரிக்கா எதிர்ப்பு ஏன்? … ஐங்கரன் விக்கினேஸ்வரா.

பாலஸ்தீனத்தின் ஐக்கிய நாடுகளின் உறுப்புரிமைக்கு அவுஸ்திரேலியா விடுத்த கோரிக்கை வாக்கெடுப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது.
இதேபோன்ற தீர்மானத்தை முன்பு அமெரிக்கா வீட்டோ செய்ததையடுத்து, இந்த விவகாரம் மறுபரிசீலனை செய்யப்பட்டது.
2012 முதல் பார்வையாளர் நாடு:
ஐ. நா. சபை பாலஸ்த்தீனத்தை 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் நாள் முதல் “பார்வையாளர் நாடு” (observer state) என்னும் நிலைக்கு அறிவித்தது. ஐரோப்பிய ஒன்றியம் பாலஸ்த்தீனத்தை முழு இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரிக்காவிடினும், அது பாலஸ்தீனத்துடன் தூதரக உறவைப் பேணி வருகிறது.
பாலஸ்தீனம் காசா பகுதியில் போர் தீவிரமீன நிலையில், இஸ்ரேலுடன் பல தசாப்தங்களாக நிலவும் மோதலுக்கு இரு நாடுகளின் தீர்வுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், பாலஸ்தீனம் அதன் தற்போதைய உறுப்பினர் அல்லாத கண்காணிப்பு நாடாக இருந்து முழு ஐ.நா. உறுப்பினராக உயர்த்தப்பட வேண்டும் என்று அவுஸ்திரேலியா வலியுறுத்துகிறது.
ஐ.நா.வில் பாலஸ்தீன அங்கீகாரம்:
பாலஸ்தீனத்தை முழு அங்கத்துவ நாடாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானம் ஐ.நா.வில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது, 193 அங்கத்துவ நாடுகள் கொண்ட ஐ.நா. சபையில் 143 நாடுகள் அதற்கு ஆதரவாக வாக்களித்தன.
அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட 9 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. இந்தத் தீர்மானம் முன்னர் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் வாக்கெடுப்புக்கு வந்தபோது, அமெரிக்கா தனது ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதைத் தடுத்திருந்தது.
இது பாலஸ்தீனியர்களுக்கு முழு ஐ.நா. அங்கத்துவத்தை வழங்கவில்லை. ஆனால் அவர்கள் சேர தகுதியானவர்கள் என்று அங்கீகரிக்கிறது.
கனடா மௌனம் ஏன் ?
தற்போது கனடா உட்பட 25 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. முன்னைய காலங்களில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானங்கள் ஐ.நா.வில் வந்தபோது, அவற்றுக்கெதிராக கனடா வாக்களித்திருந்தது. ஆனால் இந்த முறைதான் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விலகி நின்றுள்ளது.
தற்போதைய நிலைப்பாடு குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ, ‘கனடா இப்பிரச்சினைக்குத் தீர்வாக இரு நாடுகள் என்ற கொள்கை நிலைப்பாட்டில் உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால் அமெரிக்காவோ இரு நாட்டுக் கொள்கையையே எதிர்க்கின்றது.
தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் பாலஸ்தீனத்துக்குச் சாதகமாக இருந்தாலும், பாலஸ்தீனம் இத்தீர்மானம் மூலம் ஐ.நா.வில் முழு உறுப்பினராகிவிட முடியாது. ஆனால் அதன் கோரிக்கைக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்தின் முழு அங்கத்துவத்தை ஆதரிக்கும் ஒரு பெரும் பெரும்பான்மையுடன் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த பிற நாடுகள்: செக்கியா, ஹங்கேரி, அர்ஜென்டினா, மைக்ரோனேஷியா, நவ்ரு, பலாவ், பப்புவா நியூ கினியா.
இந்தியா ஆதரவாக வாக்களிப்பு:
இந்தியா ஆதரவாக வாக்களித்ததுடன்,
பாலஸ்தீனிய உறுப்புரிமையை ஆழ வேண்டிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விஷயத்தை சாதகமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரியது. தற்போது பாலஸ்தீன அரசு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெறத் தகுதி பெற்றுள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் இரு நாடுகளின் தீர்வுக்கான தனது நிலைப்பாட்டை இந்தியா எப்போதும் வலியுறுத்தி வருகிறது. அதே நேரத்தில், ஹமாஸ் நடத்திய அக்டோபர் 7 தாக்குதல் உட்பட எந்தவொரு பயங்கரவாதத் தாக்குதலையும் புதுடெல்லி கண்டித்துள்ளது.
பாலஸ்தீனியர்களுக்கு தாயகம் வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ள இந்தியா, இறையாண்மை, சுதந்திரம் மற்றும் சாத்தியமான பாலஸ்தீனத்தை பாதுகாப்பான அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் நிறுவுவது, இஸ்ரேலுடன் சமாதானமாக வாழ்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட இரு நாட்டு தீர்வை ஆதரித்துள்ளதாக இந்தியவெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐநாவில் இந்த வாக்களிப்பதற்கு முன் பாலஸ்தீனிய தூதர் ரியாத் மன்சூ, போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் பாலஸ்தீனியர்களின் அவலநிலை பற்றி விரிவாகக் கூறினார்.
ரஃபாவில் உள்ள 1.4 மில்லியன் பாலஸ்தீனியர்கள் இன்று பிழைப்பார்களா என்று ஆச்சரியப்படுகிறார்கள், என்று அவர் கூறினார். தெற்கு காசாவில் மக்கள் அடர்த்தியான நகரத்தின் மீது நடத்தப்பட்ட ஒரு பெரிய தாக்குதலைப் பற்றி தகவல்கள் வெளிவந்துள்ளன என அவர் கூறினார்.
அவுஸ்திரேலியா அங்கீகாரம் :
பாலஸ்தீனிய அரசை ஒரு தலைப்பட்சமாக அவுஸ்திரேலியா அங்கீகரிப்பதை இஸ்ரேல் கண்டனம் செய்துள்ளது. ஆனால் அவுஸ்திரேலியா வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், அங்கீகாரம் மற்றும் இரு நாடுகளின் தீர்வு ஆகியவற்றுடன் முன்னேறுவது உண்மையில் ஹமாஸைக் கட்டுப்படுத்தும் என்றார்.
ஹமாஸ் மோதலை விரும்புகிறது, இத் தீர்மானம் நீண்டகால அமைதியைப் பற்றியது. ஹமாஸ் இஸ்ரேலை அழிக்க விரும்புகிறது, இது இஸ்ரேலுக்கான நீண்டகால பாதுகாப்பு பற்றியது என்றும் அவர் கூறினார்.
காசாவின் கடைசி புகலிடமான ரஃபாவிற்குள் இஸ்ரேல் படையெடுப்பு சர்வதேச கண்டனத்தைப் பெற்றுள்ள வேளையில், அங்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.
அவுஸ்திரேலிய பிரதம மந்திரி அந்தோனி அல்பானீஸ் மற்றும் வெளியுறவு மந்திரி பென்னி வோங் மனிதாபிமான நிலைமை குறித்து கவலைகளை வெளிப்படுத்திய அதே வேளையில், ரஃபா மீதான முழு அளவிலான ஆக்கிரமிப்பிற்கு இஸ்ரேருக்கு அழுத்தம் கொடுத்து உள்ளனர். இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதை நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் அச்சுறுத்தியுள்ளார்.
எஞ்சியிருக்கும் பணயக்கைதிகளை விடுவிக்கவும், காஸாவுக்குள் தடையின்றி உதவிகளை வழங்கவும் மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு அவுஸ்திரேலியா அழைப்பு விடுத்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *